நாமக்கல்

நாமகிரிப்பேட்டையில் ரூ. 12 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

DIN

நாமகிரிப்பேட்டை கூட்டுறவு ஏல மையத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான மஞ்சள் வர்த்தகம் நடந்தது.
ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நாமகிரிப்பேட்டை ஏல மையத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெறும்.
இதில் சுற்று வட்டார பகுதி மஞ்சள் விவசாயிகள், வியாபாரிகள் விரலி, உருண்டை, பனங்காளி ரக மஞ்சள் ஏலத்தில் கொண்டு வந்து பங்கேற்பர்.  இந்த வாரம் நடந்த ஏலத்தில் விரலி ரகம் 160 மூட்டை, உருண்டை ரகம் 90 மூட்டை, பனங்காலி ரகம் 2 மூட்டை என 252 மூட்டைகள் ஏலத்துக்குக் கொண்டுவரப்பட்டன. 
இதில் விரலி ரகம் குறைந்த பட்சமாக ரூ.5 ஆயிரத்து 702-க்கும், அதிக பட்சமாக ரூ.7 ஆயிரத்து 579-க்கும் விற்பனையானது. உருண்டை ரகம் ரூ.6 ஆயிரத்து 9 முதல் அதிக பட்சமாக 6 ஆயிரத்து 992-க்கும் தரத்திற்கேற்றவாறு விற்பனையானது.
பனங்காலி ரகம் குறைந்தபட்சமாக ரூ. 9 ஆயிரத்து 712-க்கும், அதிக பட்சமாக ரூ. 10 ஆயிரத்து 212-க்கும் விற்பனையானது. இதில் மொத்தம் ரூ. 12 லட்சத்துக்கு வர்ததகம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்று ஏலம்
எடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT