நாமக்கல்

பட்டா வழங்கக் கோரி மனு

தினமணி

ராசிபுரம் பிற்பட்டோர் காலனி பகுதியில் குடியிருப்போர் வீட்டுக்கு பட்டா வழங்கக் கோரி ராசிபுரம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
 ராசிபுரம் 8-ஆவது வார்டு பகுதியில் உள்ள பிற்பட்டோர் காலனி பகுதியில் சுமார் 80 பேர் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 1985-ஆம் ஆண்டு நிபந்தனை பட்டாவுடன் கூடிய இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.
 நிபந்தனை பட்டா விதிமுறையின் படி, இடத்தின் உரிமையாளர் 30 ஆண்டுகளுக்கு இந்த இடத்தை விற்கவோ, பெயர் மாற்றம் செய்யவோ, கடன் பெறவோ முடியாது. இந்நிலையில், தற்போது 30 ஆண்டுகள் கடந்த நிலையில், அப்பகுதியினர் சுமார் 80 பேர் வீடுகளுக்கு பட்டா கேட்டு வந்தனர். ஆனால், பலமுறை பட்டா கேட்டும் வழங்கப்படாததால், சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்களும், அப்பகுதியினரும் வட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர். பின்னர் பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர். இதனையடுத்து, இந்த கோரிக்கையின் மீது பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

பனிச்சாரல்! ஸ்ரீமுகி..

டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் அசத்துவார்: குமார் சங்ககாரா

SCROLL FOR NEXT