நாமக்கல்

ரிக் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

DIN

திருச்செங்கோட்டில் தென் கர்நாடக ரிக் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பாரி கணேசன் முன்னிலை வகித்தார். இதில், தென் கர்நாடக ரிக் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மங்களூரு புருஷோத்தம ஷெட்டி தலைமையில் 70-க்கும் மேற்பட்ட ரிக் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில், டீசல், உதிரி பாகங்கள், எண்ணெய் போன்றவற்றின் விலை உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. டீசல் விலை உயர்வால் டிரில்லிங் கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என்று கருத்து கூறப்பட்டது. தென் கர்நாடக பகுதி மலைப் பிரதேசங்களாக உள்ளதால், கணிசமான அளவு கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டது.
மேலும், அனைத்து ரிக் உரிமையாளர்களும் ஒற்றுமையுடன் இருந்து கட்டண உயர்வை ஒரே மாதிரி அமல்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதில், திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க செயலர் கொங்கு சேகர், பொருளாளர் சுந்தரராஜன், துணைத் தலைவர் அசோக்குமார், துணை செயலர் ராஜவேலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT