நாமக்கல்

அ.குன்னத்தூர் மகாமாரியம்மன் கோயில் திருவிழா

DIN

பரமத்தி வேலூர் வட்டம், பிலிக்கல்பாளையம் அருகே உள்ள அ.குன்னத்தூர் மகா மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன்  தொடங்கி புதன்கிழமை மஞ்சள் நீராடுதலுடன் நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அ.குன்னத்தூர் மகாமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 31-ஆம் தேதி கம்பம் நடப்பட்டு திருவிழா தொடங்கியது. அன்று முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். இரவு பொங்கல் வைத்து மாவிளக்கு படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். புதன்கிழமை காலை மஞ்சள் நீராடலும், இரவு அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. அ.குன்னத்தூர் மகாமாரியம்மன் கோயில் திருவிழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT