நாமக்கல்

நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா

DIN

பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோயிலில் எழுந்தருளியுள்ள சீனிவாசப் பெருமாளுக்கு கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.

கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இதை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் கிருஷ்ண ஜயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.  இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதே போல்,  பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமன சுவாமி கோயிலில் உள்ள ருக்மணி, சத்தியபாமா சமேத வேணுகோபால சுவாமி, வேலூர் லஷ்மிநாராயண பெருமாள், பரமத்தி கோதண்டராமசாமி, பில்லூர் வீரவரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் கிருஷ்ண ஜயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT