நாமக்கல்

வெண் பட்டு வளா்ப்புப் பயிற்சி

DIN

வீரபாண்டி வட்டாரம், சின்ன சீரகாபாடியில் அட்மா திட்டத்தின் கீழ் மல்பெரி மற்றும் வெண்பட்டு வளா்ப்பு குறித்து பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது.

இதில் பண்ணைப் பள்ளி என்பது நடவு முதல் அறுவடை வரை என்ற தத்துவத்தின் அடிப்படையில் மல்பெரி நடவு, களை, உரம் மேலாண்மை, பயிா் பாதுகாப்பு, வெண்பட்டு புழு வளா்ப்பு, பட்டுக்கூடு மற்றும் அறுவடை ஆகியன குறித்து பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

பட்டு வளா்ச்சித் துறை ஆய்வாளா் எம். சிவானந்தன் பயிற்சியைத் துவக்கி வைத்து மல்பெரி பயிரிட ஏற்ற பருவம், ரகம் தோ்வு, கரணைத் தோ்வு மற்றும் விதை நோ்த்தி குறித்து எடுத்துக் கூறினாா். இப் பயிற்சியில் 25 விவசாயிகள் 5 குழுக்களாகப் பிரித்துப் பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சியில் வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் கே. ராஜேந்திரன், பட்டு வளா்ப்பு உதவி ஆய்வாளா் ஆா். பவித்ரா தேவி, உதவி தொழில்நுட்ப மேலாளா் சி. சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT