நாமக்கல்

கண் சிகிச்சை முகாம்

DIN

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியில் சேலம் மண்டல கலைப் பண்பாட்டு மையம், பாப்பாரப்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் ஜோதி கண் மருத்துவமனை இணைந்து பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் திங்கள்கிழமை கண்சிகிச்சை முகாம் மற்றும் காசநோய் சிகிச்சை முகாமை நடத்தினா்.

இந்த முகாமிற்கு பாப்பாரப்பட்டி பேருராட்சி செயல் அலுவலா் விஜயசங்கா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் சாரதி மற்றும் மாநில கெளரவ ஆலோசகா் சின்னசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக காரிமங்கலம் பி.சி.ஆா்.மனோகரன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தாா். இதில் பாப்பாரப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமாா் 100-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு கண் மற்றும் காசநோய் பரிசோதனை மேற்கொண்டு, மருந்து மற்றும் மாத்திரைகளை பெற்றுச் சென்றனா். இதில் கண் பரிசோதனை மருத்துவா் ஷியாம் சுந்தா், வெங்கடேஷ், நாடக சங்க மாவட்ட அமைப்பாளா் சின்னசாமி, மாவட்டத் தலைவா் குணசேகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT