நாமக்கல்

ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்: 1.80 லட்சம் பேர் விண்ணப்பம் வழங்கல்

DIN

தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, நாமக்கல் மாவட்டத்தில் 1.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், ஒரு முறை மட்டும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை, சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையின் கீழ் வருவாய்த் துறையினர் பயனாளிகளை தேர்வு செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர். 
இத்திட்டத்தைச் செயல்படுத்த மாவட்ட வாரியாக சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். கடந்த 22-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு திட்டத்தை தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
இலக்கை காட்டிலும் பயனாளிகள் எண்ணிக்கைக் குறைவாக இருந்ததால், புதன்கிழமை மாலை 5 மணி வரையில், மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 17 லட்சம் பேர் வரையுள்ளனர். அவர்களில், சுமார் 1.20 லட்சம் பேர் ரூ.2 ஆயிரம் நிதியுதவி பெறுவதற்கு ஆதார், குடும்ப அட்டை, வங்கி சேமிப்பு எண் ஆகியவற்றின் நகல்களுடன்  விண்ணப்பித்திருந்தனர். இரண்டாம் கட்ட விண்ணப்பம் பெறப்பட்ட சூழலில், புதன்கிழமை மாலை நிலவரப்படி, கூடுதலாக 50 முதல் 60 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இத்திட்டத்தை செயல்படுத்தும் மகளிர் திட்ட அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் மாவட்டம் முழுவதும், 1.80 லட்சம் பேருக்கு ரூ.2 ஆயிரம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இன்னும் ஓரிரு நாளில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைப்பார். அதைத் தொடர்ந்து, பயனாளிகள் அனைவருக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் சென்றடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT