நாமக்கல்

ஆர். பட்டணம் பகுதியில் மதுபானக் கடை திறக்க மக்கள் எதிர்ப்பு: சாலை மறியல்

DIN


ராசிபுரம் அருகே ஆர். பட்டணம் பேரூராட்சி பகுதியில் புதிய மதுபானக் கடை திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் சனிக்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டம்நடத்தினர்.
ஆர்.பட்டணம் 4-ஆவது வார்டு பகுதியில் பிரதான சாலையில் கால்நடை மருத்துவமனை, நூலகம், சுகாதார நிலையம், கிராம நிர்வாக அலுவலர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி போன்றவை உள்ளன. இதற்கு மிக அருகாமையில், புதிதாக மதுபான கடை திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. 
இதை அறிந்து அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந் நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதையடுத்து, திரளான பெண்களும், பொதுமக்களும் ஒன்று திரண்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப் பகுதியில் போக்குவரத்துப் பாதித்தது.
இதையடுத்து தகவல் அறிந்து அப் பகுதிக்கு வந்த ராசிபுரம் காவல் துறை டிஎஸ்பி ஆர். விஜயராகவன், உதவி ஆய்வாளர் பூபதி ஆகியோர் பொதுமக்களை சமரசப்படுத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட துறையினருடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் அப் பகுதியில் கடை அமைக்கும் பணியை நிறுத்துவதாக உறுதியளித்ததன் பேரில் மறியலை பொதுமக்கள் கைவிட்டனர். மறியலால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்கு வரத்துப் பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT