நாமக்கல்

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

DIN

பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் பேரூராட்சி சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
பாண்டமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சி வளாகம் அருகே நடைபெற்ற கூட்டத்துக்கு, வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதியுமான அசின்பானு, வேலூர் காவல் ஆய்வாளர் லட்சுமணகுமார் ஆகியோர் கலந்துகொண்டு, நெகிழியால் ஆன ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் கோப்பைகள், உறிஞ்சு குழல்கள், மேசை விரிப்புகள், கொடிகள் உள்ளிட்டவைகளை இனி விற்பனை செய்வது, சேகரம் செய்வது, பயன்படுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், நெகிழிக்கு மாற்றுப் பொருள்களை பயன்படுத்த அறிவுறுத்தினர்.
இதில், பரமத்தி மற்றும் கபிலர்மலை ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியன், நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் குணசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நெகிழி தொடர்பான கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் மற்றும் அதற்கான மாற்றுப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு துணிப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டன. பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு  குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர். செயல் அலுவலர் கீதா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT