நாமக்கல்

விஷம் கலந்த தானியம் சாப்பிட்ட 2 மயில்கள் மீட்பு

DIN

விஷம் கலந்த தானியங்களை சாப்பிட்ட  2 மயில்களை வனத் துறையினர் மீட்டனர்.
பரமத்தி வேலூர், கபிலர்மலை, ஜேடர்பாளையம், பாண்டமங்கலம், அனிச்சம்பாளையம், பாலப்பட்டி, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் மயில்கள் போதிய உணவு இல்லாமல் விவசாய நிலங்கள், குடியிருப்புப் பகுதிகளுக்கு இரையைத் தேடி வருகின்றன.
இந்த நிலையில், பரமத்தி வேலூர் பாவடி தெரு பகவதி அம்மன் கோயில் அருகே மரவள்ளிக் கிழங்கு பயிர்செய்துள்ள விவசாய நிலத்துக்கு அருகே விஷம் கலந்த தானியங்களை மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளனர். இதைத் தின்ற 2 பெண் மயில்கள் உயிருக்கு போராடின.
தகவலின்பேரில் நாமக்கல் வனத் துறையைச் சேர்ந்த தமிழ்வேந்தன், தனபால், முரளி மற்றும் பரமத்தி வேலூர் வனக்காவலர் நாகராஜ் ஆகியோர்  உயிருக்குப் போராடிய 2 பெண் மயில்களை மீட்டு நாமக்கல் அரசு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதையடுத்து,  விஷம் கலந்த தானியங்களை வீசியவர்கள் யார் என்பது குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

சிறகில்லாத தேவதை...!

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

ஆதி சக்தி!

SCROLL FOR NEXT