நாமக்கல்

கூட்டுறவு வேளாண் சங்கத்தில் 2000 மூட்டை மஞ்சள் ரூ.80 லட்சத்துக்கு விற்பனை

DIN

திருச்செங்கோடு வேளாண்  உற்பத்தியாளர்கள்  கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாராந்திர ஏலத்தில் 2000 மூட்டை மஞ்சள் ரூ.80 லட்சத்துக்கு விற்பனையானது. 
ஏலத்தில் அரியலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், கடலூர், ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், கள்ளக்குறிச்சி,  பொம்மிடி, அரூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.  இந்த மஞ்சளை  கொள்முதல் செய்ய   ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய ஊர்களிலிருந்து 50- க்கும் மேற்பட்ட  வியாபாரிகள் வந்திருந்தனர்.  டெண்டர்  மூலம் 2000 மூட்டை மஞ்சள் ரூ.80  லட்சத்திற்கு விற்பனையானது.  விரலி ரகம் குவிண்டாலுக்கு ரூ.7022 முதல்  ரூ.8019 வரை விற்பனையானது.  கிழங்கு ரகம் ரூ.6199 முதல் ரூ.6902 வரையும் விலைபோனது.  பனங்காளி ரகம் குவிண்டாலுக்கு ரூ.13369 முதல் ரூ.15105 வரையும் விலைபோனது.
 ஏலத்தில் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.  மற்ற விற்பனை நிலையங்களை விட,  விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு நல்ல விலை கிடைத்ததாக கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT