நாமக்கல்

ஏற்காட்டில் விசைப்படகுகள் மட்டும் தற்காலிகமாக நிறுத்தம்

DIN

ஏற்காடு, ஜூன் 13: ஏற்காடு  படகு இல்லத்தில் ஐந்து விசைப்படகுகள் மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளிகள் அதிகம் விரும்புவது படகு சவாரிதான். 
தற்போது ஏரியில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் விசைப் படகுகள் செல்கையில் ஏரியின் நீர் கலங்கல் ஏற்படுகிறது.
மேலும்  ஊராட்சியின் மூலம் ஏற்காடு நகர் பகுதி, லாங்கில்  பேட்டை, ஐந்து  ரோடு, கோவில் மேடு, லேடிஸ் சீட் பகுதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் மண்கலந்து வருவதால் பொதுமக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து மறு உத்தரவு வரும் வரை கடந்த ஜூன் 10-ஆம் தேதி பிற்பகல் முதல் விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
துடுப்புப் படகு மற்றும் பிடல் படகுகள் வழக்கம் போல் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT