நாமக்கல்

குரூப் 1 தேர்வு: நாமக்கல்லில் 4,458 பேர் எழுதினர்: 1,466 பேர் பங்கேற்கவில்லை

DIN

நாமக்கல்லில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வை  4,458 பேர் எழுதினர். 1,466 பேர் பங்கேற்கவில்லை.
துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், கூட்டுறவுத் துறை பதிவாளர் உள்ளிட்ட பதவியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில், இத்தேர்வை எழுத  5,954 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். 
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி,  அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி, பாவை கல்லூரி, ஞானமணி கல்லூரி, செல்வம் கல்லூரி உள்ளிட்ட 20 மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.  இத்தேர்வை 4,458 பேர் மட்டும் எழுதினர்.  1,466 பேர் தேர்தவில் பங்கேற்கவில்லை. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 1 மணியுடன் நிறைவடைந்தது. மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்வு மையங்களில் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியிலும்,   போலீஸார் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT