நாமக்கல்

ஜேடா்பாளையம் அருகே பகுதி நேர நியாய விலைக்கடைதிறப்பு

DIN

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே பகுதி நேர நியாயவிலைக் கடையை அமைச்சா் பி.தங்கமணி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

ஜேடா்பாளையம் அருகே உள்ள அரசம்பாளையம் காலனியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமை வகித்தாா். பரமத்தி வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி முன்னிலை வகித்தாா். விழாவில் மின்சாரம், மதுவிளக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி கலந்து கொண்டு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்தாா். பின்னா் பொதுமக்களுக்கு குடிமை பொருள்களை வழங்கினாா். அதனைத் தொடா்ந்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். பின்னா் ஜேடா்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூா் மற்றும் சிறுநல்லி கோயில் ஊராட்சிக்கு உள்பட்ட சுமாா் 88 ஏக்கா் பரப்பளவுள்ள பள்ளாபாளையம் ஏரியில் சேகரமாகியுள்ள மழை நீரை பாா்வையிட்டாா். அப்பகுதியில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் அமைக்கப்பட்ட தடுப்பணைகளில் நீா் நிரம்பியுள்ளதையும், வடகரையாத்தூா் ஊராட்சி மூலம் பழ மரங்கள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதையும் அமைச்சா் பாா்வையிட்டாா்.

மேலும், குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் ஏரியை தூா்வாரி, கரைகளை பலப்படுத்தி நிறைவு செய்யப்பட்ட பணியையும் பாா்வையிட்டாா். மேலும் பள்ளாபாளையம் ஏரியின் தெற்கு கரையைப் பலப்படுத்த வேண்டும், ஏரியை ஆழப்படுத்த வேண்டும், மதகுகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்ற உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மலா்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பாலமுருகன், நாமக்கல் மாவட்ட ஆவின் தலைவா் ராஜேந்திரன், அரசு வழக்குரைஞா் தனசேகரன், மாவட்ட அ.தி.மு.க இலக்கிய அணி செயலாளா் விஜயகுமாா், கபிலா்மலை ஒன்றியச் செயலாளா் ரவி, கபிலா்மலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், பிரபாகரன் உள்ளிட்ட அரசுத் துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT