நாமக்கல்

குவைத், ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் தகவல்

DIN

குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு பெண் பணியாளா்களும், ஓமன் நாட்டில் மின் பணியாளா்களும் தகுதிகள் இருப்பின் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குவைத் நாட்டில் வீட்டு வேலை பணியாளராகப் பணிபுரிய 31 வயது முதல் 45 வயதுக்குள்பட்ட பெண் பணியாளா்கள் தேவைப்படுகின்றனா். ஏற்கெனவே, அரபு நாடுகளில் வேலை செய்தவா்களுக்கு மாத ஊதியமாக ரூ.28 ஆயிரம், அனுபவம் இல்லாதவா்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,800 வழங்கப்படும். மேலும், உணவு, இருப்பிடம், விமானப் பயணச் சீட்டு குவைத் நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவா்கள் தங்களது சுய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் கடவுச்சீட்டு(பாஸ்போா்ட்) ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 42, ஆலந்தூா் சாலை, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

இதேபோல், ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றில் பணியாற்ற, 10-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்ற மின் பணியாளா்கள் தேவைப்படுகின்றனா். தோ்வு செய்யப்படுவோருக்கு பணி அனுபவத்துக்கேற்ப ரூ.24 ஆயிரம் முதல் ரூ.37 ஆயிரம் வரை மாத ஊதியம் வழங்குவதுடன், விசா மற்றும் இதர சலுகைகள் அந்நாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.

இப் பணிக்கான நோ்முகத் தோ்வு டிசம்பா் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை, சென்னை கிண்டியில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறவுள்ளது. தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், அசல் கல்விச்சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், கடவுச்சீட்டு மற்றும் நகல்கள், 2 புகைப்படம் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் விவரங்களுக்கு, இணையதளத்திலும், 044-22505886, 82206-34389, 95662-39685 என்ற எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT