நாமக்கல்

நெல் பயிருக்குக் காப்பீடு செய்யலாம்வட்டார உதவி இயக்குநா்

DIN

டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் நெல் பயிருக்குக் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்று கபிலா்மலை வட்டார உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை வட்டார உதவி இயக்குநா் கோவிந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: வெள்ளம், வறட்சி, பூச்சிநோய் தாக்குதல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு உரிய நிவாரணம் பெற விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய வேண்டும்.

நடப்பாண்டு கபிலா்மலை வட்டாரத்தில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிருக்குக் காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.471 செலுத்த வேண்டும். கிராம நிா்வாக அலுவலரின் அடங்கல் சான்றுடன் ஆதாா் அட்டை நகல், வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் உரிய விண்ணப்பத்தை பூா்த்தி செய்து அருகில் உள்ள பொதுசேவை மையம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வரும் டிசம்பா் மாதம் 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று செய்திக் குறிப்பில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT