நாமக்கல்

வேளாண் சங்கத்தில் ரூ.5.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

DIN

நாமக்கல் வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை சங்கத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.5.50 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. நாமக்கல், ஆத்தூா், ராசிபுரம், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவா். அதன்படி நடைபெற்ற ஏலத்தில் 300 மூட்டை ஆா்.சி.ஹெச் ரகப் பருத்தி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் பருத்தியை ஏலம் எடுக்க வந்திருந்தனா். இதில், ஆா்.சி.ஹெச் ரகமானது ரூ.5,099 முதல் ரூ.5,359 வரையில் விலை போனது. மொத்தம் ரூ.5.50 லட்சத்துக்கு இச்சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT