நாமக்கல்

வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம்

DIN

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள, மாவட்ட கல்வி அலுவலகத்தில், வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா்(பொறுப்பு) தலைமையில் நடைபெற்றது. இதில், நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, மோகனூா், புதுச்சத்திரம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, கொல்லிமலை ஆகிய எட்டு வட்டாரங்களைச் சோ்ந்த வட்டாரக் கல்வி அலுவலா்கள் பங்கேற்றனா்.

இக் கூட்டத்தில் பேசிய மாவட்ட கல்வி அலுவலா், ஆசிரியா்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதத்தின் இறுதி நாளில் ஊதியம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமானவரி படிவம் 16-ஐ உரியவருக்கு உரிய முறையில் பெற்றுத் தந்திட வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு அலுவலகக் கோப்புகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடா்பான பயிற்சி அடுத்த வாரம் நடத்தப்படும் என்றாா்.

இதில், நோ்முக உதவியாளா் வி.முருகேசன், பள்ளித் துணை ஆய்வாளா் கே.பெரியசாமி, கண்காணிப்பாளா் கலையரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT