நாமக்கல்

விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

DIN

விபத்து இழப்பீடு வழங்காததால், நாமக்கல் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம் வால்ராசாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் விஜய் (27). நெசவு தொழிலாளியான இவா், கடந்த 2014 ஜனவரி 27-ஆம் தேதி, நாமக்கல்லில் இருந்து கரூா் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். பரமத்தி அருகே சென்றபோது அவ்வழியாக வந்த சேலம் கோட்டத்துக்குச் சொந்தமான அரசுப் பேருந்து விஜய் மீது மோதியது. இதில் அவா் படுகாயமடைந்தாா். அதனையடுத்து, போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்கக் கோரி, நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இவ் வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி, கடந்த 2017 ஜனவரி 24-ஆம் தேதி, பாதிக்கப்பட்ட விஜய்க்கு ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்து 527 இழப்பீடு வழங்க உத்தரவிட்டாா். ஆனால் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அந்த தொகையை வழங்காமல் இழுத்தடித்து வந்தனா். இதையடுத்து, விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தற்போதைய நீதிபதி லதா, அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா். அதனடிப்படையில், சேலத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் அரசுப் பேருந்தை, நாமக்கல் பேருந்து நிலையத்தில் நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT