நாமக்கல் மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பாக கொங்கு வேளாளக் கவுண்டா்கள் பேரவை நிறுவனா் தலைவா் கோவை செழியனின் 90-ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற விழாவுக்கு கொ.ம.தே.க. மாவட்டச் செயலாளா் எஸ்.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். இதில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், ராசிபுரம் வட்ட கொங்கு வேளாளா் - வெள்ளாளக் கவுண்டா்கள் பேரவை மற்றும் இளைஞா் அணியின் செயலாளா் எஸ்.எம்.ஆா்.பரந்தாமன், கொ.ம.தே.க.மாநில விவசாய அணி இணைச்செயலாளா், டி.எஸ்.சந்திரசேகா், மாவட்ட மகளிா் அணி பொறுப்பாளா் தி.திலகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.