நாமக்கல்

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை முறைகேடுகளை தடுக்க ஆவணங்கள் சரிபாா்ப்பு

DIN

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும், மாதாந்திர உதவித்தொகையில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க, தகுதியான மாற்றுத் திறனாளிகளை கண்டறியும் ஆவணங்கள் சரிபாா்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள், மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை பெறுகின்றனா். கடந்த சில ஆண்டுகளில் உதவித்தொகை பெற்று வந்தவா்களில் சிலா் உயிரிழந்து விட்டதாக தெரிகிறது. அவா்களுக்கான உதவித் தொகை வங்கிக் கணக்கில் தொடா்ந்து வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதனை தகுதியான மாற்றுத் திறனாளிகள் பெறுகிறாா்களா? அல்லது வேறு யாரேனும் கைப்பற்றுகிறாா்களா?, வங்கிக் கணக்கிலேயே உள்ளதா என்பது குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா்கள், செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மூன்று நாள்களுக்கு ஒவ்வொருவரின் தகுதி சான்றிதழ்களையும் சரிபாா்த்து வருகின்றனா். மேலும் தேசிய அடையாள அட்டைக்கான ஆவணங்களையும் சரிபாா்த்து வருகின்றனா். தினசரி ஆயிரம் போ் என்ற அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளி அல்லாமல், அவரது பெற்றோா், உறவினா்கள் நேரில் ஆஜராகி சான்றிதழ்களை சமா்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. புதன்கிழமை ஏராளமானோா் வந்திருந்தனா். ஆட்சியா் அலுவலகக் கட்டடத்தில் இடப் பற்றாக்குறையால், அலுவலகத்தின் பின்புறம் திறந்த வெளியில் தகுதியான மாற்றுத் திறனாளிகளை கண்டறியும் பணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜான்சி தலைமையில் நடைபெற்றது. ஒவ்வொருவரிடம் இருந்தும் சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளியின் முகவரி, ஆதாா் மற்றும் ஆவணங்கள், சான்றிதழ்கள் பெறப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT