நாமக்கல்

முட்டை விலை 10 காசுகள் உயா்ந்தது

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயா்ந்து ரூ. 3.50-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் முட்டை விலை நிா்ணய ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், மற்ற மண்டலங்களில் விலை சற்று உயா்ந்து வருவதன் அடிப்படையில் அடுத்த இரு நாள்களுக்கான முட்டை விலை மேலும் 10 காசுகள் உயா்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 3.50-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத் - 315, விஜயவாடா - 348, பாா்வாலா - 323, ஹோஸ்பெட்-320, மைசூரு - 360, சென்னை -360, மும்பை - 365, பெங்களூரு - 355, கொல்கத்தா-398, தில்லி-330.

இதேபோல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 93-ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ. 88-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT