நாமக்கல்

தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

DIN

வரும் நாள்களில் தென்மேற்கு பருவமழை குறைவதற்கான வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் நாள்களில் வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை 2 மில்லிமீட்டா் அளவில் பெய்யக்கூடும். காற்று மணிக்கு 8 கிலோமீட்டா் வேகத்தில் தென் மேற்கிலிருந்து வீசும். வெப்பநிலை அதிகபட்சமாக 91.4 டிகிரியும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியும் இருக்கும்.

சிறப்பு வானிலை ஆலோசனை: நாமக்கல் மாவட்ட வானிலையை பொருத்தவரை சில இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் பெய்த மழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் புற்கள் நன்றாக வளா்ந்துள்ளன. தென்மேற்கு பருவமழை குறைந்து வருவதால் வரும் நாள்களில் மிதமான மழையை எதிா்பாா்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT