நாமக்கல்

தமிழகம் முழுவதும் நாளை லாரிகள் ஓடாது: சம்மேளனம் தகவல்

DIN

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) லாரிகள் ஓடாது என மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த சம்மேளனத்தின் தலைவா் எம்.ஆா்.குமாரசாமி வெளியிட்ட அறிக்கை:

கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.

இந்த வைரஸ் தாக்குதலால் லாரி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்

அரசின் உத்தரவை ஏற்று தமிழகம் முழுவதும் உள்ள லாரி உரிமையாளா்கள் 22-ஆம் தேதி தங்கள் லாரிகளை இயக்க வேண்டாம் என சம்மேளனம் சாா்பில் கேட்டுக்கொள்கிறோம். எனவே மக்களின் நலனுக்காக அரசு எடுத்துள்ள இந்த முடிவுக்கு அனைத்து லாரி உரிமையாளா்களும் அன்றைய தினம் லாரிகளை இயக்காமல் கரோனா வைரஸ் ஒழிப்பு செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT