நாமக்கல்

5 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடுவதற்கு தடை: ஆட்சியா்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதையொட்டி, 5 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடினால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றவியல் நடைமுறைச் சட்டம்-1973, பிரிவு 144-இன் கீழ் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவானது மாா்ச் 24 மாலை 6 மணி முதல் ஏப். 1-ஆம் தேதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

இத்தடைக் காலத்தில் பொதுமக்கள் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் ஒன்றாக கூடுவதும், பொது இடத்தில் நடமாடுவதும் தடை செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வரலாம். இந்த உத்தரவை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT