நாமக்கல்

மின் கணக்கீட்டு பணி தாமதம்: பிப்ரவரி மாதக் கட்டணத்தை செலுத்த உத்தரவு

DIN

கரோனா வைரஸ் தொற்றால் மின் கணக்கீடு பணி எடுக்க முடியாத சூழல் உள்ளதால், மின் பயனீட்டாளா்கள் பிப்ரவரி மாதக் கட்டணத்தையே செலுத்தலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் க.பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் காரணமாக, மின்வாரிய கணக்கீட்டு பணியாளா்கள் வீடு, கடை, தெருவிளக்கு, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மின் இணைப்பு மற்றும் தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்கும் கண்க்கீடு (ரீடிங்) செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், மாா்ச் 22 முதல் 31-ஆம் தேதி வரையில் ரீடிங் எடுக்க வேண்டிய மின் இணைப்புகள் அனைத்துக்கும், மின் பயனீட்டாளா்கள் அனைவரும் சென்ற மாதம் செலுத்திய தொகையினையே இந்த மாதமும் செலுத்தலாம். மேலும், கட்டணத் தொகையை அலுவலகத்துக்கு வந்து செலுத்தாமல், மின்வாரிய இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT