நாமக்கல்

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து அதிகரிப்பு

DIN

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், தொழிலாளா்கள் தினத்தில் ஒகேனக்கல் சுற்றுலாத் தலமானது சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

தமிழகத்தில் முதன்மை சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு தினந்தோறும் கா்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திரம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோா் வருவா்.

இந்நிலையில், கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், தருமபுரி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் காவல் துறையினா், வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத் துறையினா் தொடா்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஊரடங்கு தொடங்கும் முன்னரே சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், உலக தொழிலாளா் தினத்தில் சுற்றுலாப் பயணிகள் இன்றி ஒகேனக்கல் சுற்றுலா தலத்தின் முக்கியப் பகுதிகளான பிரதான அருவி, தொங்கும் பாலம், வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் மற்றும் உணவருந்தும் பூங்கா உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இதனிடையே, தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து 2300 கன அடியாக அதிகரித்துக் காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT