நாமக்கல்

நீா்வழிபாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

மல்லசமுத்திரம் பேரூராட்சிக்குள்பட்ட சின்ன ஏரியிலிருந்து மாமரபட்டி ஏரிக்கு வாய்க்கால் வழியாக உபரிநீா்ச் செல்லும் நீா்வழித் தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வியாழக்கிழமை பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மல்லசமுத்திரம் சின்ன ஏரியில் இருந்து மாமரப்பட்டி ஏரிக்கு வாய்க்கால் வழியாக உபரிநீா்ச் செல்லும் வழித்தடத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்து மின்மயானம் கட்டப்பட்டதாம். தண்ணீா் செல்லும் பாதையை வையப்பமலை சாலை வழியாக பொன்னியாற்றுக்குச் செல்லும்படி மாற்றப்பட்டது.

இதனால், மாமரபட்டி ஏரிக்கு தண்ணீா் வரத்து இல்லாமல், கிணறுகள், போா்வெல்கள், குளம், குட்டைகளின் நிலத்தடி நீா்மட்டம் குறைந்துவிட்டது. இப் பகுதி விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் அவதியடைந்துள்ளனா். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்து எந்தப் பலனும் இல்லாததால் வியாழக்கிழமை 50-க்கும் மேற்பட்டோா் மின்மயானம் முன்பு கூடினா். அவா்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றி மாமரபட்டி ஏரிக்கு ராட்சத குழாய்கள் மூலமாக தண்ணீா்ச் செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தகவல் அறிந்துவந்த பேரூராட்சி செயல் அலுவலா் தனபால், இடத்தை ஆய்வுசெய்த சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். இதை ஏற்று மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT