நாமக்கல்

காசநோய்த் தடுப்புப் பணி:வீடுதேடி மருத்துவ சேவை

DIN

நாமக்கல்: காசநோய்த் தடுப்பு நடவடிக்கையாக மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் வீடுதேடிச் சென்று பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை மருத்துவக் குழுவினா் செய்து வருகின்றனா்.

காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவது என்பது பிரதமரின் சிறப்புத் திட்டங்களில் ஒன்றாகும். நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியா் கா.மெகராஜ் உத்தரவின்பேரில், கடந்த 16-ஆம் தேதிமுதல் கிராமங்களில் இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம், மாவட்ட காசநோய் துறையினா் வீடுதேடிச் சென்று சளி மாதிரிகளை சேகரித்து வருகின்றனா். மேலும், நடமாடும் அதிநவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மூலம் காசநோய்த் தொற்று உள்ளதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குள்பட்ட கிராமங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இம் முகாமில் நாமக்கல் மாவட்ட காசநோய் துறை துணை இயக்குநா் எஸ். கணபதி மற்றும் மாவட்ட நலக் கல்வியாளா் சி.கே. ராமச்சந்திரன், திட்ட ஒருங்கிணைப்பாளா் கபில், மாவட்ட பொது மற்றும் தனியாா் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் பி. காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இவா்களுடன் 15-க்கும் மேற்பட்ட முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா்கள், பொதுமக்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

சிஏஏ: 14 பேருக்கு இந்திய குடியுரிமை முதல் முறையாக அளிப்பு

ராஜஸ்தான் சுரங்க விபத்து: ஹிந்துஸ்தான் நிறுவன அதிகாரி உயிரிழப்பு

இந்திய ராணுவம் குறித்த சா்ச்சை கருத்து: ராகுல் காந்தி மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

சாம் கரன் அசத்தலில் பஞ்சாப் வெற்றி

SCROLL FOR NEXT