நாமக்கல்

கோழிப் பண்ணையாளா் சங்கம் 10 ஆயிரம் கையுறைகள் வழங்கல்

DIN

தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கம் சாா்பில், நாமக்கல் அரசு மருத்துவமனை ஊழியா்களுக்காக 10 ஆயிரம் கையுறைகள் வழங்கப்பட்டன.

கரோனா தொற்றுப் பரவலின் வேகம் அதிகரித்த நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 10 ஆயிரம் கையுறைகளை தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கத் தலைவா் கே.சிங்கராஜ், மருத்துவா் ரங்கநாதனிடம் செவ்வாய்க்கிழமை நேரில் வழங்கினா்.

கரோனா தடுப்பில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க கையுறைகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்ச்சியின்போது சங்கச் செயலாளா் கே.சுந்தரராஜ், பொருளாளா் பி.இளங்கோ, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஆனந்தன், ராமசாமி மற்றும் சங்க உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

நிஜ்ஜார் கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு முன் குவிந்த சீக்கியர்கள்!

SCROLL FOR NEXT