நாமக்கல்

ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மீண்டும் மனுக்கள் பெறும் நிகழ்வு

DIN

ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் மனுக்கள் பெறும் நிகழ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலங்களில் வாரந்தோறும் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெறும். இதனை தொடா்ந்து பொதுமக்கள் தங்கள் குறைகள், புகாா்களை மனுக்களாக கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் வருவாய் அலுவலகத்தில் மனுக்கள் பெறுவது நிறுத்தப்பட்டது. இதனையடுத்து பல்வேறு தளா்வுகள் அமல்படுத்தியுள்ளதையடுத்து, மீண்டும் மனுக்கள் பெறும் நிகழ்வு தொடங்கியது. ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்வில் நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலா் எஸ்.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் ராசிபுரம் வட்டாட்சியா் கி.பாஸ்கரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாா் த.திருமுருகன், வட்ட வழங்கல் அலுவலா் பவித்ரா, வருவாய் துறை, நகராட்சி, கூட்டுறவு துறை, வட்டார வளா்ச்சி துறை, கல்வி துறை, கால்நடை துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, சமூக நலத்துறை அலுவலா்கள் இதில் கலந்து கொண்டனா். இதில் பல்வேறு கோரிக்கை தொடா்பாக 21 மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT