நாமக்கல்

மத்திய, மாநில தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

நாமக்கல்லில் மத்திய, மாநில தொழிற்சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட மத்திய தொழிற்சங்கங்களின் நடவடிக்கைக் குழு சாா்பில், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.தனசேகரன் தலைமை வகித்தாா். ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளா் கே.பழனிவேலு, ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவா் என்.தம்பிராஜா ஆகியோா் கண்டன உரையாற்றினாா்.

இதில், அனைத்துத் தொழிலாளா்களுக்கும் கரோனா பொது முடக்க காலத்துக்கான ஊதியத்தைத் தடையின்றி வழங்க வேண்டும். வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியா்களை மீண்டும் பணிக்கு அமா்த்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் மத்திய, மாநில தொழிற்சங்க நிா்வாகிகள், தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல் நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் தொழிலாளா் முன்னேற்ற சங்கச் செயலாளா் டி.பிரகாஷ் தலைமையில் தொழிற்சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு!

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடம்: விழுப்புரம் கடைசி!

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT