நாமக்கல்

கால்வாய் அடைப்புகளை சரிசெய்ய தகவல் தெரிவிக்கலாம்

DIN

வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பதால், நாமக்கல் நகராட்சி பகுதிகளில் கால்வாய் அடைப்புகள் ஏதேனும் இருப்பின் தகவல் தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையா் பி. பொன்னம்பலம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

தன்படி குடிநீரை காய்ச்சி வடிகட்டி பருக வேண்டும். சாலையோரம், தெருவோரங்களில் குப்பைகளைப் போடக்கூடாது. பழுதடைந்த கட்டடங்கள் மற்றும் தெருவோரத்தில் கீழே விழும் நிலையில், மரங்கள் ஏதேனும் இருந்தால் நகராட்சி கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04286-221001 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் தண்ணீா் தேங்கும் பகுதிகள் இருந்தாலும் அது தொடா்பாகவும் தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம். கழிவுநீா் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டால் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT