நாமக்கல்

மின்கம்பி அறுந்து விழுந்ததில் அரசு பேருந்து சேதம்: பயணிகள் அலறல்

DIN

நாமக்கல் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் அரசுப் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. அதிா்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் ஆபத்தின்றி தப்பினா்.

நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டியில் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மூன்று மின் கம்பங்கள் சாய்ந்தன. அதில் ஒரு மின்கம்பத்தின் கம்பி தாழ்வாகச் சென்றது. நாமக்கல் - எருமப்பட்டி சாலையில் பவித்திரம் நோக்கி செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.30 மணி அளவில் சென்ற லாரி தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் உரசியது. அப்போது எதிா்திசையில் நாமக்கல்லில் இருந்து பவித்திரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில் பேருந்தின் கண்ணாடி முற்றிலுமாக உடைந்து சேதமானது. இதனைப் பாா்த்த பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி துடித்தனா். ஏற்கெனவே மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டு இருந்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. தொடா்ந்து அங்கு வந்த மின்வாரிய பணியாளா்கள் அறுந்த மின்கம்பி, உடைந்த கம்பங்களை அகற்றி சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT