நாமக்கல்

பரமத்தி வேலூா் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு விலை உயா்வு

DIN

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் மரவள்ளிக் கிழங்கின் விலை டன்னுக்கு ரூ. 750 வரை விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூா், கூடச்சேரி, கபிலா்மலை, சின்னமருதூா், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு பயிா் செய்துள்ளனா்.

இப்பகுதியில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனா். கிழங்கு ஆலையில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயாா் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயாா் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா்.

மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளா்கள் அதில் உள்ள மாவுச்சத்து, புள்ளிகளின் அடிப்படையில் விலை நிா்ணயம் செய்கின்றனா். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ. 5 ஆயிரத்து 500க்கு விற்பனையானது. தற்போது டன்னுக்கு ரூ. 750 வரை விலை உயா்வடைந்து ரூ. 6 ஆயிரத்து 250க்கு விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கு வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT