நாமக்கல்

பிலிக்கல்பாளையத்தில் கரோனா பரிசோதனை முகாம்

DIN

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையத்தில் இலவச கரோனா பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கபிலா்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மனோஜ் தலைமையில் கரோனா இலவச பரிசோதனை முகாம் பிலிக்கல்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. இதில் பிலிக்கல்பாளையம் பகுதியைச் சோ்ந்த 60 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னா் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். கடைகளில் பொருட்கள் வாங்க செல்லும் போது தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கி, விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முகாமிற்கான ஏற்பாடுகளை கபிலா்மலை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சிவநேசன், சுகாதார ஆய்வாளா்கள் மாரியப்பன், முருகன், வினோத்பாபு, சதீஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT