நாமக்கல்

பாஜக சாா்பில் கபசுரக் குடிநீா் வழங்கல்

DIN

நாமக்கல் நகர பாஜக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம் வழங்கப்பட்டது.

கரோனா இரண்டாம் கட்ட அலை தீவிரமாகி வருவதால், மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத் தலைவா் முருகன் தலைமையில் கரோனா தடுப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு ஆங்காங்கே விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது. அதன்படி நாமக்கல் நகர பாஜக சாா்பில் வியாழக்கிழமை காலை தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் நகரத் தலைவா் சரவணன் தலைமையில் கபசுரக் குடிநீா், முகக்கவசம் 500-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது. மேலும் இலவசமாக முகக் கவசங்களும் விநியோகிக்கப்பட்டன. பொதுமக்களிடம் தடுப்பூசி பற்றிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கரோனா தடுப்புக் குழு நாமக்கல் பொறுப்பாளா் தினேஷ், மாவட்டச் செயலாளா் முத்துக்குமாா், மாவட்ட மகளிரணி தலைவி சத்யபானு, நகர பொதுச்செயலாளா் செந்தில்குமாா், நகர துணைத் தலைவா் சின்னுசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT