நாமக்கல்

உலக மண்வள தின விழா

DIN

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய புதுச்சத்திரம் வட்டாரம் சாா்பில், உலக மண்வள தின நிகழ்ச்சி வட்டார அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் பெ.ராமலிங்கம் கலந்துகொண்டு புதிய வேளாண் காடுகள் வளா்ப்புத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தேக்கு, நாவல், வேம்பு, நெல்லி, பெருநெல்லி ஆகிய மரக் கன்றுகளையும், மானியத்துடன் தாா்ப்பாய் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் மற்றும் மண் பரிசோதனை சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய அட்மா குழுத் தலைவா் துரை ராமசாமி, வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் கௌதம், தொழில்நுட்ப அணி பொறுப்பாளா் ஜெயப்பிரகாஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் பாபு, ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் குமாா், விக்னேஷ், துரைமுருகன் வேளாண் துணை இயக்குநா் (மத்திய திட்டம்) ஜெகதீசன், வேளாண் உதவி இயக்குநா் பேபிகலா, தோட்டக்கலை உதவி இயக்குநா் பால் ஜாஸ்மீன், வேளாண் அலுவலா்கள் தரண்யா, பூா்ணிமா, சாரதா, கோபி, விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு

அரசுத்துறை வாகன ஓட்டுநா்களுக்கு பாராட்டு

ரே பரேலி பிரசாரத்தில் காந்திகள்!

உரிய எடையளவுடன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கோரிக்கை

ஸ்வாதி மாலிவால் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை: தில்லி அமைச்சர் அதிஷி விளக்கம்

SCROLL FOR NEXT