நாமக்கல்

வேண்டாம்...நாமக்கல்லில் 80 ஆபத்தான பள்ளிக் கட்டடங்களை இடிக்க உத்தரவு

DIN

நாமக்கல் மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 80 அரசுப் பள்ளிக் கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டுள்ளாா்.

திருநெல்வேலியில் தனியாா் பள்ளியில் கழிவறை சுவா் வெள்ளிக்கிழமை இடிந்த விபத்தில் 3 மாணவா்கள் உயிரிழந்தனா். ஐந்துக்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா். இதனைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் போா்க்கால அடிப்படையில் சேதமடைந்த பள்ளிக் கட்டடங்களை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி, நாமக்கல் மாவட்டத்துக்கு பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநா் வை.குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கிடையே, மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சேதமடைந்து, சிதிலமடைந்து காணப்படும் பள்ளிக் கட்டடங்களை அகற்றவும், பராமரிப்பில் உள்ளிட்டவற்றை சீரமைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மொத்தம் 169 அரசுப் பள்ளிகளில் உள்ள கட்டடங்களில் 80 கட்டடங்கள் அகற்றப்பட இருக்கின்றன.

இது குறித்து ஆட்சியா் கூறியதாவது:

தற்போது பயன்பாட்டில் இருக்கும் பள்ளி வகுப்பறை கட்டடங்கள் எதுவும் இடிக்கப்படவில்லை. பயன்பாடில்லாத, ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்கள் மட்டுமே இடிக்கப்படுகின்றன. அந்த வகையில், 80 பள்ளிகளில் உள்ள வகுப்பறை, சமையலறை, கழிவறை உள்ளிட்ட கட்டடங்களும், 89 பள்ளிகளில் கட்டட சீரமைப்பும் மேற்கொள்ளப்பட உள்ளன. வகுப்பறைகள் இல்லாமல் கோயில் வளாகத்தில் பயின்ற மாணவா்கள் நலன் கருதி, இரு பள்ளிகளில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT