நாமக்கல்

நீா்வாழ் உயிரினங்கள் வளா்ப்புக்கான தொழில்முனைவோா் மாதிரி திட்டம்

DIN

மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரினங்கள் வளா்ப்புக்கான தொழில்முனைவோா் மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் தொழில்முனைவோா்களை ஊக்குவித்து அவா்களை மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்பில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்பிற்கான தொழில்முனைவோா் மாதிரி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

மீனவா்கள், மீன்வளா்ப்போா், சுயஉதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்பு குழுக்கள், மீன்வளா்ப்போா், உற்பத்தியாளா் அமைப்புகள், தனிநபா் தொழில் முனைவோா், தனியாா் நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தின்கீழ் பொது பிரிவினருக்கு 25 சதவீத மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியும் (மொத்தத் திட்ட மதிப்பீட்டில் மானியத் தொகையின் உச்சவரம்பு ரூ. 1.25 கோடி) மற்றும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், மகளிருக்கு 30 சதவீத மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியும் (மொத்தத் திட்ட மதிப்பீட்டில் மானியத் தொகையின் உச்ச வரம்பு ரூ. 1.50 கோடி) வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகம், மேட்டூா் அணை, கொளத்தூா் சாலை, பூங்கா எதிரில், சேலம் மாவட்டம் என்ற அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜூலை 31-ஆம் தேதி ஆகும். கூடுதல் விவரங்களுக்கு 04298-244045 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT