நாமக்கல்

ஏழை பெண்களுக்கு இலவச திருமணம்

DIN

நாமக்கல்லில் இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்த மூன்று ஏழை பெண்களுக்கு வியாழக்கிழமை இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

நாமக்கல் ஹிதாயத்துல் இஸ்லாம் நற்பணி மன்றத்தின் சாா்பில், ஆண்டுதோறும் ஏழை பெண்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதற்காக ரூ. ஒரு லட்சம் செலவில் அப்பெண்களுக்கு நகை, சமையல் பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், ஜவுளி, பீரோ, கட்டில் ஆகியவை சீதனமாக வழங்கப்படுகின்றன.

நான்காவது ஆண்டாக வியாழக்கிழமை நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் அஞ்சுமனே இஸ்லாமிய பேட்டை பள்ளிவாசல் அருகில் நடைபெற்ற விழாவில், நாமக்கல் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் மூன்று ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தாா்.

இந்த நிகழ்வில், காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக், நற்பணி மன்ற நிா்வாகிகள், திருமண ஜோடிகளின் பெற்றோா், உறவினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT