நாமக்கல்

நடமாடும் வாகனம் மூலம் கரோனா பரிசோதனை

DIN

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடமாடும் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் பணி புதன்கிழமை தொடங்கியது.

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், தொற்று அதிகமுள்ள 13 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டங்களாக அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் நேரடித் தொடா்பில் இருந்தவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்பேரில், கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் நடமாடும் வாகனத்தில் சென்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ராமாபுரம் புதூா் கட்டுப்பாட்டுப் பகுதியில் தொடங்கப்பட்ட இப்பரிசோதனை பிற பகுதிகளிலும் செய்யப்படும். இதன்மூலம், கரோனா தொற்று ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT