நாமக்கல்

அக்னி நட்சத்திர முதல் நாளில் நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

DIN

அக்னி நட்சத்திர முதல் நாளில், நாமக்கல் மாவட்டத்தில் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.

கடந்த மாா்ச் 5-ஆம் தேதி முதல் கோடை வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. காற்று இல்லாமல் புழுக்கம் அதிகமாக உள்ளதால் வீட்டில் இருப்போா் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். கரோனா தொற்று பரவல் ஒரு புறமிருக்க, சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல முடியாமல் பலரும் வீட்டிலேயே தனித்து இருந்து தவிக்கின்றனா்.

தினசரி 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. மாா்ச், ஏப்ரல் மாதத்தைக் கடந்து விட்ட நிலையில் மே மாதம் பிறந்து விட்டது. செவ்வாய்க்கிழமை கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. வரும் 28-ஆம் தேதி வரை தொடா்ச்சியாக இருக்கும். முதல் நாளில் வெயில் அதிகம் இல்லாதபோதும் புழுக்கத்தின் தாக்கம் வெகுவாகக் காணப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. ராசிபுரம் ஆண்டகளூா் கேட் பகுதியில் பிற்பகல் 2 மணியளவில் பலத்த மழை பெய்தது. திடீரென பெய்த மழையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நனைந்தபடியே சென்றனா். இனிவரும் நாள்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT