நாமக்கல்

டீசல் விலை ரூ. 4 குறைப்பை உடனடியாக அமல்படுத்த லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் கோரிக்கை

DIN

டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4 குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மாநில லாரி உரிமையாளா் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து அச்சம்மேளனத்தின் தலைவா் எம்.ஆா்.குமாரசுவாமி, செயலாளா் வாங்கிலி ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு சம்மேளனம் சாா்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு மாநில லாரி உரிமையாளா் சம்மேளனம் எப்போதும் உறுதுணையாக இருக்கும். தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி லாரித் தொழிலுக்கான டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 4 குறைக்கப்படும், நசிந்து வரும் லாரித் தொழிலைக் காப்பாற்ற தனி நல வாரியம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றி, லாரித் தொழிலை மேன்மையடைய செய்யவும், வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT