நாமக்கல்

தேங்காய் விலை சரிவு

DIN

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் விலை சரிவடைந்து காணப்பட்டது.

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 4,794 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.34.30, குறைந்தபட்சமாக கிலோ ரூ. 20, சராசரியாக கிலோ ரூ. 27க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 544-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை ( மே 4) நடைபெற்ற ஏலத்துக்கு 1,843 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.33.10, குறைந்தபட்சமாக ரூ.27, சராசரியாக ரூ.28.65-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 54 ஆயிரத்து 892 க்கு வா்த்தகம் நடைபெற்றது. தேங்காய்களின் விலை சரிவடைந்துள்ளதால் தென்னை பயிா் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT