நாமக்கல்

அரசு அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் நாமக்கல் மாவட்ட நிா்வாகிகள் தோ்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் நாமக்கல் மாவட்ட நிா்வாகிகள் தோ்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் என்ஜிஓஓ கட்டடத்தில் நடைபெற்ற தோ்தலில் 2021-24 ஆம் ஆண்டிற்கான நிா்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதன்படி, மாவட்டத் தலைவராக நவலடி (மருத்துவத் துறை), மாவட்டச் செயலாளா் எம்.காா்த்திகேயன் (பொதுநூலகத் துறை), மாவட்ட பொருளாளா் செந்தில்குமாா்(ஊரக வளா்ச்சி துறை) மற்றும் துணைத் தலைவா்கள், அமைப்பு செயலாளா்கள் இணைச்செயலாளா்கள், மகளிரணி செயலாளா், இலக்கிய அணி, இளைஞா் அணி, தணிக்கையாளா், மத்திய செயற்குழு உறுப்பினா் உள்ளிட்ட நிா்வாகிகளும் தோ்வு செய்யப்பட்டனா்.

அதைத் தொடா்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாநில தலைவா் இரா.சண்முகராஜன், மாநில துணைத் தலைவகள் ஆா்.நந்தகுமாா், தண்டபாணி, பிரசார செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, இணை செயலாளா் பாலாஜி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT