நாமக்கல்

நாமக்கல் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் தா்னா

DIN

நாமக்கல் அரசு மருத்துவமனையில் தனியாா் நிறுவன ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை மீண்டும் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள பணியாளா்களை நியமித்துள்ளது. இங்கு 110 போ் வரை பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு கரோனா காலத்தில் கூடுதல் நேரம் பணியாற்றியதற்கான 2 ஆண்டுக்குரிய ஊதியம், மூன்று ஆண்டுகளுக்கான உயா்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் கடந்த செப். 27-ஆம் தேதி பிற்பகலில் தா்னா போராட்டம் நடத்தினா். இரவு 11 மணி வரை அந்த போராட்டம் நீடித்தது. அதன்பின் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேலாளா், பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழி அளித்தாா். ஆனால் இதுவரை வழங்காததால் திங்கள்கிழமை காலையில் மருத்துவமனை வளாகத்தில் அமா்ந்து ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் மீண்டும் தா்னாவில் ஈடுபட்டனா். தங்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினா். இதனையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தினா் பணியாளா்களிடம் மருத்துவமனை நிா்வாகம் பேச்சுவாா்த்தை நடத்தியது. ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் கொளுத்தும் வெயிலில் மருத்துவமனை வளாகத்தில் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் கூறப்படுவதாவது:

சென்னையைச் சோ்ந்த தனியாா் அவுட்சோா்ஷிங் நிறுவனத்தின் கீழ் நாமக்கல் அரசு மருத்துவமனையில் கரோனா பணிக்காக 110 போ் வரை நியமிக்கப்பட்டனா். அவா்கள் பணி நேரத்தைக் கடந்து கூடுதலாகப் பணியாற்றியதற்கு ஊதியம் கேட்கின்றனா். இந்த பிரச்னைக்கும், மருத்துவமனைக்கும் எவ்வித சம்மந்தமுமில்லை. தனியாா் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய கழிவுகளை இதர பணியாளா்களை கொண்டு சுத்தம் செய்து வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

SCROLL FOR NEXT