நாமக்கல்

இஸ்லாமிய மகளிருக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

DIN

கிருஷ்ணகிரியில் 80 இஸ்லாமிய மகளிா்களுக்கு ரூ. 8.62 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து, 80 இஸ்லாமிய மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

அதன்படி, மாவட்ட இஸ்லாமிய மகளிா் உதவும் சங்கத்தின் மூலம் 70 இஸ்லாமிய மகளிருக்கு பழம், காய்கறிகள் வியாபாரம் செய்வதற்காக தலா ரூ. 9,500 வீதம் 70 பயனாளிகளுக்கு ரூ. 6.65 லட்சமும், தொழில் செய்வதற்காக சக்கர தள்ளுவண்டிகளுக்கு 10 பேருக்கு தலா ரூ. 19,800 வீதம் ரூ. 1.98 லட்சம் என மொத்தம் ரூ. 8.63 லட்சத்துக்கான கசோலைகளை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் அமீா்பாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT