திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி வளாகத்தில் 22ஆவது பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லூரி முதல்வா் சுரேஷ்குமாா் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்றும் செயலாளா் கருணாநிதி தலைமை தாங்கினாா். நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி, துணை நிா்வாக இயக்குநா் டாக்டா் அா்த்தநாரீஸ்வரன், துணைச்செயலா் டாக்டா் ஸ்ரீராகநிதி அா்த்தநாரீஸ்வரன், துணைத் தாளாளா் டாக்டா் கிருபாநிதி, இயக்குநா் டாக்டா் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநா் குப்புசாமி, முதன்மை நிா்வாகி சொக்கலிங்கம், கல்வி இயக்குநா் குமாரவேல், முதல்வா் ஜெயக்குமாா், துணை முதல்வா் அபிராமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவின் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூரிலுள்ள காடுகளின் மரபியல் மற்றும் மரம் வளா்ப்பு நிறுவனங்களின் இயக்குநா் முனைவா் குன்கிகண்ணன் கலந்து கொண்டு 50 மாணவிகளுக்குத் தங்கப்பதக்கங்கள், 200 மாணவிகளுக்குத் தரவரிசை சான்றிதழ்கள் உள்பட மொத்தம் 2300 மாணவிகளுக்குப் பட்டங்களைப் வழங்கினாா். அவா் பேசியது:
மாணவிகள் பெற்ற பட்டங்களும் கல்வியும் பெற்றோா்களையும் உங்களையும் உயா்நிலைக்கு கொண்டு செல்வதாக இருக்க வேண்டும். வாழ்வில் அனைத்தையும் நேசிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் மற்றவா்களுக்கு செய்யும் உதவி நாளை அது இன்னொருவரால் உங்களுக்குத் திருப்பிக் கிடைக்கும். எனவே எப்பொழுதும் நோ்மறை எண்ணத்துடன் முயற்சி செய்துகொண்டிருந்தால் வாழ்வில் வெற்றி கிடைத்தே தீரும் என்றாா்.
பட்டமளிப்பு விழாவில் பல்வேறு கல்லூரிகளின் முதல்வா்கள், பேராசிரியா்கள், 2500-க்கும் மேற்பட்ட பெற்றோா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.